Thiru

Thiru

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

வருணாசிரம ஒடுக்கலாலும் இன
ஆதிக்கத்தாலும் தமிழர்கள் இழந்தவைகளில் கலையும்
ஒன்று. கலைகளில் தமிழரின் ஈடுபாடு முழுமையாக
இன்மையினாலேய எமது விழுமியங்களை பிற,
ஆதிக்கக் கலை வடிவங்களிடம் இழந்து
வந்திருக்கிறோம்.
கலைகளின் வழி மொழியின் வேர்கள் தாங்கிப்
பிடிக்கப்படுகின்றன. கலை வடிவங்களில் மக்களைச்
சந்திப்பவர்கள் தாங்கள் பலவிலைகளைக் கொடுத்தே
அதைச் செய்கின்றனார்கள். எனவே அவர்கள்
எக்கலைப் பிரிவினராயனும் மக்களினூடு சமூகத்திற்கு
ஏதாவது ஓர் பங்களிப்பைச் செய்துவருகின்றார்கள்.
அந்த வகையில் இந்த முறை திரைப்படம் மற்றும்
நாடகத்துறையில் ஊக்கமுடன் ஈடுபட்டுவரும்
திரு தனபாலன் அவர்களைச் சந்திக்கிறோம்.

நேர்முகம்: தேன்மொழியாள்

 

நேர்காணல்
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் இன்ற கனடாவை
வாழிடமாகவும் கொண்ட திரு.தனபாலன் அவர்கள்,
கனடாவில் திரைப்படத் துறையிலும், நாடகத்
துறையிலும் தனது கால்களை நன்கு பதித்துள்ளவர்.
கரைதேடும் தேடும் கலைகள் மூலம் கனடிய
மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளவர். சிறுவயது
முதற்கொண்டு நாடகக்கலையில் ஆர்வம் கொண்ட
இவர், இன்று ஓர் இயக்குனராகப் பணியாற்றி
வருகின்றார்.


கேள்வி :நீங்கள் நாடகத்துறை மூலமும்
திரைப்படத்துறை மூலமும் கனடியத் தமிழ் மக்களுக்கு
நன்கு அறிமுகமாகியுள்ளீர்கள். உங்களை இந்தவாரம்
சந்திப்பதில் முழக்கம் பெருமை கொள்கிறது.


தனபாலன்: ஆமாம் நான் ஒரு நாடக,
திரைப்படத்துறை ஆர்வலன். அந்த வகையில்
முழக்கம் இதழ் என்னைப்
பெருமைப்படுத்துவதையிட்டு மிகவும்
மனமகிழ்ச்சியடைகின்றேன். நன்றி.


கேள்வி:  நீங்கள் ஒரு திரைப்பட இயக்குனராகவும்
நாடக இயக்குனராகவும் இருக்கிறீர்கள். இக்கலை
உங்களிடம் இயல்பாகவே உருவாகியவையா?
அல்லது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று
யார் மூலமாகவாவது உருவாகியவையா?


தனபாலன்: உண்மையில்
இத்தகைய ஆர்வம் என்னிடம்
இயல்பாகவே உருவானவை
என்று சொல்லமாட்டேன்.
சண்முகநாதன் என்னும்
என்னுடைய நண்பர், ஏன்
குரு என்று கூடச்
சொல்லமுடியும். அவர்தான்
எனக்கு சிறுவயது
முதற்கொண்டு நாடகத்துறையில் ஆர்வத்தை
ஊட்டியவர். எனது ஒவ்வொரு செயற்பாட்டிற்கும்
ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர் அவர்.
இளம்பருவத்தில் வேறு சிந்தனையில்
மனம்போகவிடாது சனசமூக நிலையத்தினூடாக
என்னை நெறிப்படுத்தியவர். நான் எனது சிறுவயது
முதற்கொண்டு கனடா வருவது வரை அவரது
வழிகாட்டல் தான் என்னை உருவாக்கியது என்று
சொல்வேன்.


கேள்வி:  கரைதேடும் அலைகள்| என்ற
படத்தின்மூலம் மூலம் நீங்கள் திரைப்படத்துறையில்
கால் பதித்துள்ளீர்கள். இதற்கு முன்னர் இது சார்ந்த
பட்டறிவு ஏதாவது உங்களுக்கு இருந்ததுண்டா?


தனபாலன்: ஆமாம் நான் சிறுவயது முதற்கொண்டு
நாடக நடிகனாக இருந்திருக்கின்றேன். எனது பதினைந்
தாவது வயதில் ஷஅந்தஸ்து| என்ற நாடகத்தில்
நடித்தேன். அந்த நாடகம் பாடசாலை மட்டத்தில்
மிகவும் பெருமைப்படுத்திப் பேசப்பட்டது. அதன்மூலம்
நானும் பெருமைப்படுத்தப்பட்டேன். அதன் பிறகு
தொடர்ந்து நாடகங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புக்கள்
வந்தன. கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில்
பயின்றபோது நாடகங்கள் பலவற்றை இயக்கி
நடித்திருக்கின்றேன். அங்கே விசுவாமித்திரர்| என்ற
நாடகத்தில் சிறந்த நடிகர் என்ற பரிசு எனக்குக்
கிடைத்தது. பின்னர் நான் ஆசிரியராகப் பணியாற்றிய
காலங்களில் எனது மாணவர்களை வைத்து பல
நாடகங்களை இயக்கி மேடையேற்றியிருக்கின்றேன்.
கனடா வந்தபிற்பாடு கலை பண்பாட்டுக்
கழகத்தினருடன் இணைந்து பல நாடகங்களில்
நடித்தும் இருக்கின்றேன். இயக்கியும் இருக்கின்றேன்.
அண்மையில் கூட உறுதிப்பூக்கள் நிகழ்வின் போது
வீட்டுக்கு வீடு| என்ற நாடகத்தை மேடையேற்றினேன்.
இதன்மூலம் கிடைத்த பட்டறிவு திரைத்துறை என்ற
பாரிய துறையினுள் நுழைய நம்பிக்கையைத் தந்தது.

கேள்வி: கரைதேடும் அலைகள்| திரைப்படம்
எப்போது வெளிவந்தது?


தனபாலன்: இதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம்
மிக நீண்டது. 1999இல் எடுக்கத்தொடங்கி, கிட்டத்தட்ட
மூன்று ஆண்டுகளின் பின்னரே திரையிட முடிந்தது.
இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு கனடாவில்
திரையிடப்பட்டது.

கேள்வி:  இ;வ்வளவு காலம் உங்களுக்கு
எடுத்ததற்கான பின்னணி என்ன?


தனபாலன்: முதலாவது கனடாவில் இருக்கக்கூடிய
நேரப் பற்றாக்குறை. கலைஞர்களை வார இறுதி
நாட்களிலேயே சந்திக்க முடியும். மற்றது பாடல்கள்
அனைத்தையும் நாமே எழுதி அதற்கு வேண்டிய
இசை போன்ற விடயங்களைக் கவனித்து நடித்து
திரையேற்றக் காலம் எடுத்தது.

கேள்வி: இத்திரைப்படத்தின் கதை எதைப்பற்றியது?


தனபாலன்: கதை புலப்பெயர்வு சார்ந்தது. வன்னிக்கு
இடம் பெயர்ந்த குடும்பம் ஒன்றைப் பற்றியும்
கனடாவிற்குப் புலம்பெயர்ந்த குடும்பம்
ஒன்றைப்பற்றியும் கதை பின்னிச்செல்கிறது. இதற்குள்
வாழ்க்கைப்போராட்டம், விடுதலைப்போராட்டம்,
குடும்ப அங்கத்தவர்களிடையே உள்ள
உறவுப்போராட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள்
கதையைக் கொண்டு செல்கின்றன. இத்திரைப்படத்தில்
தென்னிந்தியத் திரைப்படப்பாடகர் திரு வு.டு.மாகராஜன்
ஒரு பாடல் பாடியிருக்கிறார். அனைவரும்
பார்க்கவேண்டிய படம்.


கேள்வி: இத் திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு
ஃவிமர்சனம் பற்றிக் கூறுங்கள்?


தனபாலன்: நிச்சயமாக ஈழத்தமிழர் மத்தியில் நல்ல
வரவேற்புக் கிடைத்தது. திரையரங்கில் தொடர்ந்து
மூன்று கிழமைகள் ஓடியது. ஓர் ஆண்டின் பின்னர்
ஏழு காட்சிகள் ஓடியிருக்கின்றன. இப்போதும்
இடையிடையே அத்திரைப்படத்தை ஒரு முறை
திரையரங்கத்தில் போடு என்று கேட்பவர்களும்
உண்டு. கடைகளில் விற்பனைக்கு வைத்த அத்தனை
ஒளிநாடாக்களும் விற்கப்பட்டுவிட்டன. இதுவும்
வெற்றிக்கான ஒரு சான்றாகவே நான் கருதுகின்றேன்.
அது தவிர பலரும் தொலைபேசியில் அழைத்து,
இந்தக் கதை என்னுடைய சொந்தக்கதை போல
இருக்கிறது. வந்தநாள் முதற்கொண்டு என்னுடைய
சகோதரர்களுக்காகப் பாடுபட்டேன். ஆனால் இன்று நீ
ஆர் என்று கேட்கிறார்கள். என்னுடைய துக்கத்துக்கு
ஒரு வடிகாலாக இருக்கிறது' போன்ற விமர்சனங்கள்
வந்திருக்கின்றன. மேலும் திரு.வைரமுத்து
சொர்ணலிங்கம் அவர்கள் இத்திரைப்படத்தை
ஒன்றிற்கு இரண்டு தடவைகள் பார்த்து விட்டு
செய்தித்தாள் ஒன்றில் விமர்சனம் எழுதினார். திரு.சாமி
அப்பாத்துரை அவர்களும் நல்ல ஒரு விமர்சனம்
எழுதியிருக்கிறார்.


கேள்வி: பொருளாதார ரீதியில் இத்திரைப்படத்தின்
வெற்றி பற்றிச் சொல்லமுடியுமா?


தனபாலன்: உண்மையில் எனது நோக்கம் பணம்
அல்ல. நான் விடுதலைப்போராட்டத்தில் நாட்டம்
கொண்டவன். அதனை திரைப்படத்தின் மூலம்
வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால்
பொருளாதார மட்டத்தில் எனக்கு அதிகளவு இலாபம்
இல்லைத்தான். அதற்கு முக்கிய காரணம்
திரைப்படத்தின் தரம் என்பதல்ல. எனக்குச்
சந்தைப்படுத்தக்கூடிய திறன் இல்லையென்றே
கருதுகின்றேன். இதற்கென ஒரு தனித்திறன்
வேண்டுமல்லவா?


கேள்வி: இத்திரைப்படம் கனடா தவிர்ந்த வேறு தமிழர்
வாழும் நாடுகளில் திரையிடப்பட்டதா?
தனபாலன்: ஆமாம். பாரிஸில் பல தடவைகள்
திரையிடப்பட்டது. அது தவிர தமிழீழம் வன்னியில்
இதன் ஒளிநாடாவைப் பலரும் பார்த்ததாக
அறிகின்றேன்.


கேள்வி: மேலும் தொடர்ச்சியாக ஏதாவது திரைப்படம்
இயக்கும் எண்ணம் உண்டா?


தனபாலன்: ஆமாம். ஷவாலிபதேசம்| என்றொரு
திரைப்படத்திற்குரிய கதை எல்லாம்
வடிவமைக்கப்பட்டு விட்டது. இதில் நடிப்பதற்குரிய
நடிகையர் சார்பில் சிறு சிக்கல்கள் உள்ளன.
அவர்கள் இப்போது தமது கல்வியில் அதிகளவு
அக்கறை செலுத்துவதால் தாமதமாக இருக்கிறது. ஒரு
நல்ல நடிகை கிடைத்துவிட்டால் நான் மேற்கொண்டு
அத் திரைப்படத்தை நகர்த்திச் செல்லமுடியும்.
இத்திரைப்படம் முற்று முழுதாக இளைஞர்களின்
சிக்கல்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்போகும்
திரைப்படம்.


கேள்வி: நல்லது. வெற்றிபெற வாழ்த்துகள்.
திரைப்படம் நாடகம் போன்ற துறைகள் தவிர வேறு
உங்கள் ஈடுபாடுகள் என்ன?


தனபாலன்: இலக்கிய ஆர்வம் நிறைய உண்டு.
அதனை மேலும் வளர்த்துக் கொள்ள தற்போது
தமிழ்க்கலைத் தொழில்நுட்பக் கல்லூரி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழத்துடன்
இணைந்து நடத்தும் இளம்கலைப் பட்டப்படிப்பில்
இணைந்து படிக்கிறேன். அது தவிர எங்கள் ஊர்
பழைய மாணவர்; சங்கத்தின் தலைவராக
இருந்திருக்கிறேன். சங்கத்தின் செயற்பாடுகளில்
இணைந்து செயற்பட்டுவருகின்றேன்.

கேள்வி: உங்களது குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.
இவர்கள் உங்களுடைய கலைத்துறை வாழ்க்கைக்கு
உதவியாக இருக்கிறார்களா?

தனபாலன்: அப்பா சிறுவயதில் தவறிவிட்டார்.
அண்ணர்மார் தான். சகோதரிகள் எனக்கு
இல்லை. அதனால் குடும்பப்பொறுப்பு அதிகம்
இல்லாததால் நான் நினைத்ததை அப்வப்போது
செய்ய முடிகிறது. மனைவி குடும்பத்தலைவி.
நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய
இராணுவத்தினரின் ஆட்சிக் காலத்தில் இறந்து
விட்டது. அம்மா எனது நாடகம், திரைப்படம்
என்பனவற்றைப் பார்த்துவிட்டு உற்சாகப்படுத்துவார்.
ஆலோசனைகள் வழங்குவார்.

கேள்வி:  முழக்கம் செய்தித்தாள் பற்றி உங்கள்
மதிப்பீடு என்ன?
தனபாலன்: ஒரு தரமான செய்தித்தாள். தேச
விடுதலையை, செய்தித்தாள் தொடங்கிய
காலத்திலிருந்து இன்று வரை ஒரே தன்மையான
பார்வையில் பார்த்து வரும் ஒரே இதழ்.
மூடநம்பிக்கையை முற்றாக ஒழித்து,
ஆன்மீகத்தை தவிர்த்து வரும் ஓர் இதழ் என்ற
வகையில் முழக்கத்தைப் பார்க்கலாம். ஆனால்
ஆன்மீக ஈடுபாட்டைத் தவிர்ப்பது எவ்வளவுக்குப்
பொருத்தம் என்று எனக்குத் தெரியவில்லை.........
மேலும் முழக்கம் நாட்டுச் சிக்கல்கள் அதிகமாக
இருந்த காலத்தில் கனடாவிலும் அது பற்றிப் பேசப்
பயப்பிடும் காலத்திலும் கூட, தேசியத்தை
முன்னெடுப்பதில் மாறாத கொள்கையையே
கடைப்பிடிக்கிறது.
அத்துடன் இதழியல் அறம் என்பதை முழக்கம்
கடைப்பிடித்து
வருகிறது என்றே
சொல்லவேண்டும்.
தான் விட்ட
தவறுகளுக்கு
மன்னிப்புக்
கேட்பதிலும் மறுப்புத்
தெரிவிப்பதிலும்
முழக்கம் என்றும்
பின்னிற்பதில்லை.

கேள்வி: நன்றி.
இவ்வளவு நேரமும்
உங்களுடைய
நேரத்தையும்
பொருட்படுத்தாமல்
எங்களுடன் இந்த
நேர்காணலில்
பங்குகொண்டு
பயனுள்ள
கருத்துக்களைப் பரிமாறிக்
கொண்டதற்கு
மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும்
வேளையில் உங்களுடைய கலையுலக வாழ்க்கை
மேலும் வெற்றிபெற முழக்கம் மனமார வாழ்த்துகிறது.


தனபாலன்: நன்றி. இலைமறைகாயாக ஆங்காங்கே
இருக்கும் திறமையாளர்களைத் தேடிப்பிடித்து மக்கள்
மத்தியில் அறிமுகம் செய்து வைப்பதில் முழக்கம்
முன்னிலை வகிக்கிறது என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் இந்தவாரம் என்னுடைய நேரம் என்று

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை 27 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது.  இதுவே எமது தேசிய நாளுமாகும்.

எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது.  இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல.  இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.  இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்.  எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்;ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல.  அவன் ஒரு இலட்சியவாதி.  ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன்.  மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன்.  சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன்.  எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள்.  அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல.  அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு.  ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு.  உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை.  அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.  அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப் பற்றிக்கொள்கிறது.  ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.

தமிழீழ சுதந்திரப்போர் இன்று ஆசியக் கண்டத்தின் முதன்மையான விடுதலைப் போராட்டமாக சர்வதேசப் புகழ் அடைந்திருக்கிறது.  மூன்றாம் உலகில் ஒடுக்கப்படும் இனங்களுக்கும், அடக்கப்படும் மக்களுக்கும் எமது புரரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒரு முன்னுதாரணமாக, வழிகாட்டியக அமைந்திருக்கிறது.  சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.  நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது.  இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள்.  போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.


நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும்.  ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை.  இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது.   


இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன்.  அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன்.  அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப்பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.


இந்த மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும்நான் போற்றுகிறேன்.  உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய் நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள்.  இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்துக்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும்.  உங்களது குழந்தைகள் சாகவில்லை, சரித்திரமாகிவிட்டார்கள்.


எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும்.  எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும்.  எமது மக்கள் சுதந்திரமக, கௌரவமாக பாதுகாப்பாக வாழ வேண்டும்.  இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும்.  இரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும்.


நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கிறோம்.  அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தால் நீர்பாய்ச்சி வளர்க்கிறோம்.  இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989
இந்திய தமிழீழப் போரின் உக்கிரமமான காலப்பகுதி.தினம் தினம் விடுதலைப் புலிகள் தம் அர்ப்பணிப்புக்களால் போர்க் களத்தில் தமிழீழ விடுதலையை ஓங்கி முரசறைந்து கொண்டிருந்த இறுக்கமான காலப்பகுதி. தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மாவீரர் நாள் உரை. இக்காலப் பகுதியில் பதியப்படுவது பொருத்தமென எண்ணி பதியப்படுகிறது.


தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை 1989

"எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். எத்தனையோ உலக நாடுகளில் அந்த நாடுகளின் விடுதலைக்காக போரிட்ட படை வீரர்களின், பாதுகாப்புக்காப் போரிட்ட படைவீரர்களின் நினைவாகவும் இப்படிப் பட்ட மாவீரர் நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். உங்களுக்குத் தெரியும் இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடத்திலிருந்து வீரச்சாவடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே "மாவீரர் நாள்" ஆகப் பிரகடனப் படுத்தியுள்ளோம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த "சங்கரின்" நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம்.

அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள் வசதியானவர்கள் இப்படிப்பட்டவர்களைத் தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அது போல எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் எனும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று, எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத் தான் கருதுகிறோம் என்பதுடன் வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக இணைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லாவிட்டால் காலப் போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதைகள் குறிப்பிட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர் நாள் கொண்டாடுவதற்கு முடிவெடுத்தோம். ஓர் இனத்தைப் பொறுத்தவரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஒர் காட்டுமிராண்டி இனமாக மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது எங்கள் இனத்தில் பெண்கள் புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதே வேளை வீரர்களுக்குத் தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம் எமது வீரர்களைக் கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம்.

இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது. இன்று எமது இனம் உலகிலேயே தலை நிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம் தான். அவர்களுடைய வீரமான தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்."

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர்.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவியரீதியில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த டிசெம்பர் 8ம் நாளன்று ஐ.நாவில் தாக்கல் செய்துள்ளனர்.

 

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

சிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையின் 18, 19, 1 ஆகிய உறுப்புகளில் உறுதியளிக்கப்பெற்ற பேச்சுரிமையையும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மீறுவதாகும் என்று இம்முறையீடு எடுத்துரைக்கின்றது.

 

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க், இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியர் கே. பி. சிவசுப்ரமணியம், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் இம்முறையீட்டைத் தாக்கல் செய்தனர்.

 

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இந்தியா (தமிழ்நாடு, மகாராட்டிரம், கர்நாடகம், புது தில்லி) தென் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர் மன்றத் தலைவர்கள், சட்டப் பேராசிரியர்கள், ஒய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட உலகளாவிய 1,705 சட்டத்தரணிகள் இம்முறையீட்டுக்குச் சட்டப் பிரதித்துவம் வழங்கியுள்ளனர்.

தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.

- மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

Page 1 of 2

Newsletter

Quas mattis tenetur illo suscipit, eleifend praesentium impedit!
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…