செய்தி

செய்தி (3)

கடந்த பெப்பிரவரி 4ஆம் நாள் சிறீலங்கா சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணாண்டோவைக் கைது செய்யக்கோரி இன்று ரொரன்ரோவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரொரன்ரோவில் உள்ள பிரித்தானியத் தூதரகத்துக்கு முன்னால் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தாய் மன்றம், நாடுகடந்த தமிழீழ அரசு, மூதறிஞர் கந்த முருகோசனார் அமையம், கனடாத் தமிழர் சமூக அமையம் ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தின்போது 'பிரித்தானிய அரசே இனப்படுகொலைக் கொலையாளியைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்து, இனப்படுகொலையாளிக்குக் கொடுத்த இராஜதந்திரி பத்திரங்களை திருப்பப்பெறு, கொலைவெறி சிங்கள ஆதிக்கமே தமிழீழ மண்ணைவிட்டு ஓடு' போன்ற முழக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்யதவர்களால் எழுத்து வடிவிலும் முழக்கமாகவும் எழுப்பப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ரொரன்ரோவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவரை தமிழ்த்தாய் மன்றச் செயலாளர் திருமுருகவேந்தன், நாடுகடந்த அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மா. க ஈழவேந்தன், மூதறிஞர் கந்தமுருகேசனார் அமையத்தின் நிறுவனர் மு.க தமிழ் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பிரித்தானிய மண்ணில் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் அச்சுறுத்தலாய் நடந்துகொண்டமை குறித்து பிரித்தானியா காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பிரித்தானியத் துணைத்தூதுவரை கோரியதாகவும், பலரும் கண்டனங்கள் எழுப்பிய நிலையில் இது குறித்து எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என பிரித்தானிய அரசு ஆராய்ந்து வருவதாகத் துணைத்தூதுவர் குறிப்பிட்டதாகவும், கனடியத் தமிழர்களின் குரலாகக் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை பிரித்தானிய அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகளின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்ததாகவும் கூறினர். ஒளிப்படங்கள்: ஆர்ப்பாட்டத்தின்போது மற்றும் ரொரன்ரோவுக்கான பிரித்தானிய தூதுவர் கெவின் மைக்குறுகர்

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர்.

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவியரீதியில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த டிசெம்பர் 8ம் நாளன்று ஐ.நாவில் தாக்கல் செய்துள்ளனர்.

 

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

சிறிலங்காவின் அரசமைப்புச் சட்டத்துக்கான ஆறாம் திருத்தம் குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக உடன்படிக்கையின் 18, 19, 1 ஆகிய உறுப்புகளில் உறுதியளிக்கப்பெற்ற பேச்சுரிமையையும் மனசாட்சிச் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மீறுவதாகும் என்று இம்முறையீடு எடுத்துரைக்கின்றது.

 

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க், இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியர் கே. பி. சிவசுப்ரமணியம், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் இம்முறையீட்டைத் தாக்கல் செய்தனர்.

 

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்சு, சுவிட்சர்லாந்து, இந்தியா (தமிழ்நாடு, மகாராட்டிரம், கர்நாடகம், புது தில்லி) தென் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர் மன்றத் தலைவர்கள், சட்டப் பேராசிரியர்கள், ஒய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட உலகளாவிய 1,705 சட்டத்தரணிகள் இம்முறையீட்டுக்குச் சட்டப் பிரதித்துவம் வழங்கியுள்ளனர்.

தற்கொலை தொடர்பான செய்திகள் எதனையும் கனடா நாட்டின் எந்த ஊடகங்களும் வெளியிடுவதில்லை

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…