உச்ச நீதிமன்றம் தீர்ப்பு : தமிழகத்திற்கு நீர் அளவு குறைப்பு 177 TMC

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய, காவிரி நீர் குறைக்கப்பட்டுக் கொண்டே வருவதால் 24 லட்சம் ஏக்கரில் நடந்து வந்த விவசாய சாகுபடியானது 16 லட்சமாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது நீர் குறைக்கப்பட்டுள்ளதால் மேலும் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

குறிப்பு : தீர்ப்பில் உள்ள நீரின் அளவை கர்நாடகா என்றுமே நமக்கு கொடுத்ததில்லை அப்படி இருக்க.. அரசியல் கட்சிகளின் குமுறுறல்கள் வெறும் நடிப்பே

சணவணன் தங்கப்பாவின்( Saravanan Thangappa) குமுறல் .அவரின் முகநூல் பதிவு இது

 படம் சொல்லும் கதைகள்....

இப்பகுதிக்கு உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ்த் தேசியத்தைப் பாதிக்கும்  எதுவாயினும் எழுதி அனுப்புங்கள்.

மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

மன்னரும் பொன்னரும் பல்வேறு விடையங்கள் தொடர்பாக.... இங்கு பேசுவார்கள்....

விரைவில் .....விரைவில் ..... மணமகன், மணமகள் தேவை பகுதி உங்கள்  பார்வைக்கு! உங்கள் தேவைகளை அனுப்பவேண்டிய முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. உறுதிப்படுத்துவதற்கான தொலைபேசி எண்ணையும் இணைக்கவும்.

பெப்ரவரி 20, 2018, செவ்வாய் கிழமை அன்று:

• தாயகத்தில் வவுனியாவில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும்,
• அவர்கள் போராட்டத்தை ஏறெடுத்து பாராதிருக்கும் சிறிலங்கா அரசின் செயலை வன்மையாக கண்டித்தும்,
• நீண்ட காலம் விசாரணையின்றி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்,
• லண்டனில் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை 'கழுத்தை வெட்டுவேன்' என்று சைகை காட்டி எச்சரித்து லண்டன் தமிழ் மக்கள் மீது இனவெறியை வெளிப்படுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வன் செயலை கண்டித்தும்,
• தாயகத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர் நிலங்களை மீட்க மண் மீட்பு போராட்டத்தில் போராடி கொண்டிருக்கும் மக்களை ஏறெடுத்து பாராத அரசின் உதாசீனத்தைக் கண்டித்தும்,
• இந்த நூற்றாண்டின் கொடிய இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலைக்கு நீதி வேண்டியும்

காலம்: பெப்ரவரி 20, 2018 செவ்வாய் கிழமை அன்று
நேரம்: மாலை 3:00 மணி முதல் 7:00 மணி வரை
இடம்: 36 Eglinton Ave W, Toronto, ON M4R 1A1 - முகவரியில் அமைந்திருக்கும் இலங்கை துணை தூதரகத்திற்கு முன்பாக
கனடா தமிழ் சமூகம்

கடந்த பெப்பிரவரி 4ஆம் நாள் சிறீலங்கா சுதந்திர நாள் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெணாண்டோவைக் கைது செய்யக்கோரி இன்று ரொரன்ரோவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரொரன்ரோவில் உள்ள பிரித்தானியத் தூதரகத்துக்கு முன்னால் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தாய் மன்றம், நாடுகடந்த தமிழீழ அரசு, மூதறிஞர் கந்த முருகோசனார் அமையம், கனடாத் தமிழர் சமூக அமையம் ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தின்போது 'பிரித்தானிய அரசே இனப்படுகொலைக் கொலையாளியைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்து, இனப்படுகொலையாளிக்குக் கொடுத்த இராஜதந்திரி பத்திரங்களை திருப்பப்பெறு, கொலைவெறி சிங்கள ஆதிக்கமே தமிழீழ மண்ணைவிட்டு ஓடு' போன்ற முழக்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்யதவர்களால் எழுத்து வடிவிலும் முழக்கமாகவும் எழுப்பப் பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ரொரன்ரோவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவரை தமிழ்த்தாய் மன்றச் செயலாளர் திருமுருகவேந்தன், நாடுகடந்த அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மா. க ஈழவேந்தன், மூதறிஞர் கந்தமுருகேசனார் அமையத்தின் நிறுவனர் மு.க தமிழ் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், பிரித்தானிய மண்ணில் சிறீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் அச்சுறுத்தலாய் நடந்துகொண்டமை குறித்து பிரித்தானியா காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பிரித்தானியத் துணைத்தூதுவரை கோரியதாகவும், பலரும் கண்டனங்கள் எழுப்பிய நிலையில் இது குறித்து எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என பிரித்தானிய அரசு ஆராய்ந்து வருவதாகத் துணைத்தூதுவர் குறிப்பிட்டதாகவும், கனடியத் தமிழர்களின் குரலாகக் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை பிரித்தானிய அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகளின் பார்வைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்ததாகவும் கூறினர். ஒளிப்படங்கள்: ஆர்ப்பாட்டத்தின்போது மற்றும் ரொரன்ரோவுக்கான பிரித்தானிய தூதுவர் கெவின் மைக்குறுகர்

Page 1 of 5
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…