Thiru

Thiru

Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தமிழிசையின் தொன்மையும் பெருமையும்:
உலகம் என்னும் நெருப்புப்பந்து முதன்முதலாகக்
குளிர்ந்து,கல்லும் மண்ணும் தோன்றிப் புல்லும்
பூண்டும் முளைத்தபின், முதலில் தோன்றிய மாந்தன்
தமிழன் என்பது நடுநிலை ஆய்வாளர்களின்
முடிபாகும். அப்படியாயின் அவனது பண்பாடுதான்
உலகின் மிகமிகத் தொன்மையான பண்பாடாகும். ஓர்
இனத்தின் பண்பாட்டுக் கூறுகளில் மொழியும்
கலைகளுமே முதன்மையானவை. இசையே மொழிக்கு
அடிப்படையானது என்பதால், தமிழ்மொழி உலகின்
மூத்தமொழி என்றால் அதனினும் மூத்தது தமிழன்
கண்ட தமிழ் இசை என்பது பெறப்படும்.


அத்தமிழிசையைத் தொல்காப்பியர், ஷநரம்பின்மறை|
(சுரங்களின் வேதம்) என்று குறிப்பிடுகிறார். எனவே
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழிசை நன்கு
வளர்ந்த செவ்வியற்கலையாக இருந்தது என்பது
தெளிவாகிறது. அதில் பல விரிவான இசை இலக்கண
நூல்கள் இருந்தன என்பதும் தெரிகிறது. அவை
யாவும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அவ்விசையின் பெற்றிமைகள் சங்க இலக்கியங்களில்
ஆங்குஈங்காகக் காணக்கிடக்கின்றன. அவற்றில்
பரிபாடல் என்பது ஓர் இசைத் தமிழ் இலக்கியமாகவே
இருக்கிறது. அதனையடுத்துத் தமிழிசைக்கு இலக்கண
நூலாகவும் இலக்கிய நூலாகவும் தோன்றியது
தமிழனின் தனிப்பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரம்.
அதன்பின்னர்க் காரைக்காலம்மையார் பதிகங்கள்
எழுந்தன. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர்
பாடிப்பாடிப் தமிழையும் இறைப்பற்றையும் பரப்பிய
இசைப்பாடல்கள் தேவாரம் எனப்பட்டன. அவற்றில்
தமிழிசையின் பல வடிவங்களை இன்றுங்கண்டு
வியக்கலாம். அவற்றைப் பாடும் முறையை மிகச்
சிலராகிய ஓதுவார் பெருமக்கள் மட்டுமே இன்றளவும்
பாடிப் பாதுகாத்து வருகின்றனர்.


அயலார் ஆட்சிகளும் பண்பாட்டுச் சீரழிவும்:
ஆரியர், களப்பிரர், பல்லவர், முகலாயர், தெலுங்கர்,
மராட்டியர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரஞ்சுக்
காரர், ஆங்கிலேயர் முதலியோர் அடுக்கடுக்காக
இந்நாட்டில் படையெடுத்தும் ஆட்சியமைத்தும்
வந்தமையால் தமிழிசை போற்றுவாரற்றுப் பொலி
விழந்து போயிற்று. தெலுங்கு நாயக்கர்கள்
ஆட்சிக்காலத்தில், தமிழிசையைத் தெலுங்குப் பாடலில்
அமைத்துப் பாடும் வழக்கம் ஏற்பட்டது. தெலுங்குப்
பாடலுக்கு அரசு அளிக்கும் மதிப்பைக் கண்டு
அக்காலத்தில் தமிழரே தெலுங்கு மொழியைக் கற்றுக்
கொண்டு தெலுங்கில் பல உருப்படிகளைச் செய்தனர்.
தஞ்சை நால்வர் எனப்படும் சின்னையா,
பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர்
தமிழில் பல இசை நாட்டிய உருப்படிகளை
இயற்றியது போலவே தெலுங்கிலும் இயற்றினார்கள்.


இதனால் தமிழ்நாட்டு இசையரங்குகளில் தமிழில்
பாடும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து,
தெலுங்கில் பாடும் வழக்கம் வளர்ந்தது. தமிழன் கண்ட
தமிழிசை தென்னாட்டில் மட்டும் வழங்கியதால், அது
கரைநாட்டின் இசை, என்ற பொருளில் பிற்
காலத்தில் ஷகர்நாடக சங்கீதம்| என்று குறிக்கப்பட
லாயிற்று. இதனால் தமிழிசை என்பது ஓதுவார்கள்
பாடுவது என்றும், கர்நாடக சங்கீதம் என்பது தெலுங்கு
நாட்டிலிருந்து வந்த வேறுபட்ட இசை என்றும் மக்கள்
தவறாக நினைக்கும்படியாயிற்று.


வடமொழிக்கலப்பு மிகுதியாக உள்ள தெலுங்கு
மொழியாளர்க்கு வடமொழியிற் பாடினாலும் பெரிதும்
வேற்றுமை தோன்றுவதில்லையாகையால், முத்துசாமி
தீட்சிதர் போன்றோர் வடமொழியில் மிகுதியாகப்
பாடல் இயற்றினர். தியாகராசர், சியாமா சாத்திரி
முதலியோர் தெலுங்கில் பாடினர். இசைத்தமிழ்க்
கலைச் சொற்கள்யாவும் வடமொழிமயமாக்கப்பட்டன.
பெரும்பாலும் தெலுங்கில் பாடப்படுவதால் தமிழிசையைத்
தெலுங்கு நாட்டிலிருந்து வந்த இசையென்று
தமிழர் பலர் நினைத்தனர்.


தமிழிசை இயக்கம்:
18-ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஷதுய்ப்ளேக்சு|
என்ற ஆளுநர்க்கு முன் ஓர் இசையரங்கு
நடைபெற்றது. பாடகர் தெலுங்கு மொழியில் பாடினார்.
அதைக்கண்ட துய்ப்ளேக்சு, அருகில் இருந்த
ஆனந்தரங்கரிடம், ஷஷஏன் தமிழ்மக்கள் எதிரில் தெலுங்கி
லேயே பாடுகிறார்கள்? தமிழில் பாடமாட்டார்களா?||
என்று கேட்டார். தமிழிசைக்கு ஆதரவான முதற்குரல்
இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அதன்பிறகு பாரதியார், சென்ற நூற்றாண்டின்
தொடக்கத்தில், ஷஷதமிழ்நாட்டு இசையரங்குகளில்
மக்களுக்குத் தெரியாத மொழியில் பாடிக்
கொண்டிருந்தால், நம் சனங்கள் சங்கீத ஞானத்தை
இழந்து போகும்படி நேரிடும்|| என்று எழுதினார். பாரதி
யார்தம் தமிழிசை இயக்கத்துக்கு வித்திட்டவர்.
1940-க்குப் பிறகு அண்ணாமலை அரசர்
முதலானோர் தமிழிசை இயக்கம் அமைத்துத்
தமிழர்கள் என்றும் மறக்க முடியாத அரும்பணிகள்
பலவற்றை ஆற்றிவந்தார்கள். தமிழில் பாடவேண்டும்
என்று பரப்புரை செய்துவந்த அவர்களுக்கு எதிர்ப்பு
மிகுதியாக இருந்தது. எதிர்ப்பவர்கள் தமிழில்
இசைப்பாடல்கள் இல்லை என்றனர். தமிழ்மொழி
இசைக்கு ஏற்றதன்று என்றனர். இசைக்கு மொழி
யில்லை, அதை எந்த மொழியில் பாடினால் என்ன?
என்றனர். இத்தடைகளுக்குத் தமிழிசை இயக்கத்தினர்
தக்க விடையைத் தந்து வந்தனர். எனினும் யாரும்
அதைப் பொருட்படுத்தவில்லை. பார்ப்பனியத்தையும்
பக்தியையும் வெறுத்த பெரியாரும், ஷஷநமக்கு
வேண்டாத பசனைப் பாட்டுகள் தமிழில் இருந்தால்
என்ன? தெலுங்கில் இருந்தால் என்ன? இந்தியில்
இருந்தால் என்ன? அல்லது சப்பான், செர்மனி
மொழியில் இருந்தால்தான் என்ன?|| என்று மக்களிடம்
பேசினார். (பெரியார் பார்வை, ஏடு 14) இது தமிழிசை
வளர்ச்சிக்கு எதிராக அமைந்தது. இதனால்
தமிழர்களிற் சிலர் தமிழன் கண்ட இசையைப் பக்தி
இயக்கத்துக்கும் பார்ப்பனர்க்கும் சொந்தமான கலை
என்று கருதினார்கள். எனினும் பாவேந்தர், அண்ணா
முதலியோர் தமிழிசை இயக்கத்தை ஆதரித்தனர்.
ஷஷதெலுங்கு இசைத்தால் மறுப்பீர்கள், தமிழே பாடச்
செய்யுங்கள், அதற்காகத் திரண்டெழுங்கள்!||
என்று பாடினார் பாவேந்தர்.
ஷஷவிளங்காத மொழியினிலே பாட்டைக்கேட்டுத்
தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும்
தனக்கதுவோர் கலையின்பம் தருவ துண்டோ?||
என்று பாடினார் நாமக்கல்லார்.
என்றாலும், இன்றுவரையில் தமிழ்நாட்டில் வானொலி,
தொலைக்காட்சி, இசையரங்கு, நாடகஅரங்கு
களில் தெலுங்கில் பாடுவதே வழக்கமாக இருந்து
வருகிறது.
வரலாற்றுக் கெட்டாத காலத்தில் தோன்றி வளர்ந்து
வந்த தமிழிசைக்கு 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
வடநாட்டுச் சாரங்கதேவரின் ஷசங்கீதரத்னாகரம்| தான்
முதல் நூல் என்றும், தொல்காப்பியத்தில்
விளக்கப்படும் மெய்ப்பாடுகளையுடைய தமிழ்க்
கூத்துக்கலைக்குக் கி.பி.5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
பரதமுனிவரே தந்தை என்றும் ஒரு கூட்டத்தார்
அறியாமையாலோ, வேண்டுமென்றோ கூறி வரு
கின்றனர். இக்கலைகளுக்குத் தாமே உரிமை
கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் உண்மை
உணர்ந்து தமது இசைக்கலையை மீட்டெடுக்க
வேண்டும்.
தமிழிசை மீட்புக்கு
மேற்கொள்ளவேண்டிய பணிகள்:
1. வடமொழிமயமாக்கப்பட்டுவிட்ட இசைக்கலைச்
சொற்களுக்கு இயன்றவரையில் தமிழ்ச்சொற்களைப்
பயன்படுத்த வேண்டும். சங்கீதம், கச்சேரி, கீர்த்தனை,
ராகம் என்பவற்றை முறையே இசை, இசையரங்கு,
உருப்படி, பண் என்று சொல்ல எல்லோராலும்
இயலும்.
2. பாட்டுப்பாட வாய்ப்பு நேரும்போதெல்லாம்
தமிழ்ப்பாடல்களையே பாடவேண்டும். மொழி இல்லாத
இசைக்கருவிகளில் வேண்டுமானால் பிறமொழிப்
பாடல்களின் மெட்டுகளை வாசிக்கலாம்.
3. பல முறை பாடிப்பாடி மெருகேறி விட்டதால்தான்
தெலுங்குப்பாடல்கள் இசை நலம் சிறந்தனவாகச்
சிலர்க்குத் தோன்றுகின்றன. நாமும் மொழிப்பற்றுடன்
நம் தமிழ்ப்பாடல்களை அவ்வாறு பாடி மெருகேறச்
செய்யவேண்டும்.
4. நீண்டகாலமாகப் பிறமொழிப் பாடல்களைக்
கேட்டுச் சலித்துப்போன தமிழர்களுக்கு இசையுணர்வு
அற்றுப்போய்விட்டது. இசையுணர்வை உண்டாக்கும்
வகையில் இசையரங்கு நடக்கும் இடங்களுக்குக்
குழந்தைகளுடன், குடும்பத்துடன் செல்லும் வழக்
கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
5. இசையரங்குகளில் தெலுங்கில் பாடினால் தமிழில்
பாடுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து
பிறமொழியில் பாடினால் அதை எதிர்த்துக் குரல்
எழுப்ப வேண்டும்.
6. தமிழ்மொழியைப் பாதுகாக்கப் போராடும் மொழி
இலக்கிய அமைப்பினர், இசையைப் பாதுகாப்பதும்
தூய்மை செய்வதும் வளர்ப்பதும் தமிழ்பபணியே
என்று கருத வேண்டும். தமிழின் 3 கூறுகளில் ஒன்று
இசைத்தமிழ். அதையும் நாடகத் தமிழையும் பாதுகாக்க
முன் வராவிட்டால் அவர்கள் மூன்றில் ஒரு பங்குத்
தமிழ்ப்பணியே செய்வதாக முடியும்.
7. இறைப்பற்றுப் பாடல்களைப் பாடுவதைப்
பகுத்தறிவாளர்கள் எதிர்க்கக்கூடாது. அவற்றைத்
தமிழில் பாடச் செய்து, அவற்றில் உள்ள தமிழையும்,
இசையையும் சுவைக்க வேண்டும்.
8. பார்ப்பனர் அல்லாதோர் இசைத்துறையில் சிறந்து
விளங்கினால், அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்க
வேண்டும்.
9. பல்கலைக் கழக இசைப் பாடத்திட்டத்தைத்
தமிழ்ப்பாடல்களுக்கே முதன்மை தரும் வகையில்
மாற்றியமைக்க வேண்டும். இசைக்கலைச் சொற்
களைத் தமிழாக்கிக் கற்பிக்கும்படிச் செய்ய வேண்டும்.
10. தமிழ்ச் செய்யுள்களைக் கற்பிக்கும்
தமிழாசிரியர்கள், அவற்றை இசையுடன் பாடிக்காட்ட
வேண்டும். இயலாவிட்டால் இசை தெரிந்தோரின்
உதவியை நாடவேண்டும்.
11. எல்லா விழாக்களிலும் இளைஞர்களுக்குத் தமிழ்
இசைப்போட்டிகள் நடத்திப் பரிசளிக்க வேண்டும்.
12. தமிழிசையின் தொன்மை, பெருமைகள் பற்றிய
நிகழ்முறை விளக்கக் கூட்டங்கள் அடிக்கடி நிகழ்த்த
வேண்டும்.
13. திரையிசைப் பாடல்களின் துணைகொண்டு
செவ்விசையில் நாட்டம் உண்டாகச் செய்யலாம். இவ்
வகையில் இளைஞர்களை இசையில் திருப்ப இயலும்.
இன்ன தமிழ்ப்பாடல் இன்ன பண். அதேபண்தான்
இந்தத் திரைப்பாடல் என்று பாடிக்காட்டலாம்.
14. இசைக்கலை மீட்டுக் குறித்துப் பயிற்றும்
பயிலரங்குகளை இன்றைய இளைஞர்களுக்கு
ஆங்கால நடத்தி நமது இசையின் வரலாறு, சிறப்பு,
அதன் இன்றைய நிலை ஆகியன பற்றிய அறிவை
ஏற்படுத்தலாம்.
15. தமிழர் தம் குழந்தைகளுக்குக் கட்டாயம் இசை,
நாட்டியம் முதலிய கலைகளில் ஒன்றைக் கற்பிக்க
வேண்டும்.
16. வெறும் சொற்பொழிவாக இருக்கும் கருத்தரங்கு
மேடைகளில் கூட, இடையிடையே இனிய தமிழிசைப்
பாடல்களைப் பாடச் செய்ய வேண்டும். இப்பணிகளைப்
பொறுப்புடன் செய்து வந்தால் நம்
பகைவர்கள் பறித்துக்கொண்டு உரிமை கொண்டாடி
வரும் நமது இசைத்சொத்தை நம்மால் மீட்டெடுக்க
முடியும்.
எண்ணம்: முனைவர் இரா. திருமுருகன்
நன்றி: உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டு மலர்

செ. யோகநாதன் (அக்டோபர் 1, 1941 - சனவரி 28, 2008) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறும்புதினங்களையும் எழுதியவர். புனை­வுகள், கட்­டு­ரைகள், மொழிப்­பெ­யர்ப்­புகள், குழந்தை இலக்­கியம் என தொன்னூறுக்கும் மேற்­பட்ட நூல்­களை இவர் எழுதியுள்ளார்.

ஈழத்து பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் 28-01-
08 திங்கள் காலமானார். முன்னர் உதவி அரசாங்க அதிபராக பணி புரிந்தவர்
என்பதோடு ஈழத்து இலக்கியத்துறையில் முன்னோடிகளில் ஒருவராகவும்
விளங்கியவர். சிறுகதை, நாவல், நாடகம், சினிமா எனப் பல்துறையிலும் ஈடுபாடு
கொண்டு கட்டுரைகள், நேர்காணல்கள், விமர்சனங்கள் என பல பத்திரிகை
களிலும் எழுதி வந்தவர். ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பல ஆண்டுகள்
கலைப்பணியாற்றியவர். தமிழ்த்தேசியத்திலும் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும்
கொண்ட இவர். ஐந்து தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசு
பெற்றவர். தமிழகத்திலும் தமிழக அரசின் பல விருதுகளைப் பெற்றதோடு முதல்வர்
கலைஞர் கருணாநிதி யாலும் பாராட்டும் பரிசும் பெற்றவர். இதுவரை
எண்பத்திநான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

 

 

உச்சிதொடங்கி உள்ளங்கால் வரை வியர்த்துக்
கொட்டியது. நீர்த்திவலைகளையெல்லாம்
துடைத்தவளாக அந்தத் தாய் அவனைப் படுக்கை
யினின்றும் எழுப்பியிருத்துகிறாள். ஒட்டி உலர்ந்த
அந்த உடலின் மூட்டுக்களெல்லாம் முடிச்சாய்த் தெரி
கின்றன. உயிரைத் தக்கவைத்துக் கொள்ளும்
எலும்புக்கூடு, தசைக்கோளங்கள் வற்றி வடிந்திருந்தன.
துணியில் சுற்றிய விறகுக் கட்யையைப் போல
உருவம். தொண்டைக் குழியிலிருந்தும் உயிரின்
அசைவாக தீனக்குரலில் முனகல்.
இன்றா நேற்றா? இரண்டு மாதங்களாக இதே
அவஸ்தை. சுருங்கிப்போன அந்தக் கழுத்தில்
அம்மியைப் போல தாயத்தும், கையில்
குளவியைப்போல சுற்றிக் கட்டப்பட்ட ஷஷஅச்சரக்||கூடும்.
அந்த உருவத்துக்குப் பாரச்சுமையை
ஏற்றிவைத்ததைப்போல....
ஷஷலொக்....க்.... லொக்.... லொக்....ம்ஹ்||
இருமும் போது அவன் மார்பு இரண்டாக
வளைந்து மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது.
அடித்தொண்டையினின்றும் வெளிவரும் கோளையைக்
காறித்துப்பியதும் அவனடையும் அமைதி, அடுத்த
கணமே ஆரம்பமாகப் போகும் மரண அவஸ்தையின்
அடையாளமாக.
நெஞ்சிலே சாய்திருந்த மகனைத் தலைக்கும்
இடுப்பிற்குமாகத் தலை அணையை வைத்து,
சுவரிலே சாத்திய பொன்னம்மாள், பாயை உதறி
மீண்டும் படுக்கையில் போட்டாள். அந்தப்
படுக்கையைச் சுற்றிக் கற்பூரச் சட்டியும் வேப்பங்
குழையும் காவலாகக் கிடக்கின்றன. அந்தப்
படுக்கைக்கு நேர் எதிரே இறப்பில் கதிர்காமக்
கந்தனுக்குக் காணிக்கையாகக் கட்டின குத்திக்காசு
வெள்ளைத் துணியில் உறங்கியது.
அந்த மகனின் தலையைச் சுற்றி
ஷஷநேர்த்திக்கடன்|| செய்த ஷஷபாணிச்சாவலும்,
வெள்ளப்போடும்|| வாசலில் சுகதேகிகளாக
இரைக்காக் கிளறிக் கொண்டிருந்தன. பொன்னம்மாள்
துப்பட்டியை எடுத்துப் போர்த்திவிட்டாள். மகனின்
கண்கள் பனிப்பதைக் கண்டவள்....
ஷஷஎன்னெ ராசா செய்யிது?|| தாய்மை
துடித்தது.
ஷஷநெஞ்சிக்குள்ளே முள்ளப்போட்டு
இழுகிறாப்லெ இருக்கம்மா!|| இவ்வளவும்
சொல்வதற்குள் அவன் உயிர் போய்த் திரும்பிய
தைப்போல, முக்கி முணகிக் கொண்டே மீண்டும்
புரண்டு படுத்தான். மகனின் வேதனையில்
பொன்னம்மாளின் ஈரற்குலை, நெருப்பில் விழுந்த
புழுப்போல நெளிந்து துடித்தது.
என்றும்போல அன்றும் கிருஷ;ணன்
கிண்ணடியப் பள்ளிக்கூடத்திற்குப் போய் வீடு
திரும்பிக் கொண்டிருக்கும் போது - கோடை
மழையில் நன்றாக நனைந்து வந்து -
ஷஷமேலெல்லாம் உளையுதம்மா|| என்று பாயில்
படுத்தவன்தான். காலையில் எழும்பும்போது
தும்மலுடன் கண் விழித்தான். அதற்குப்பிறகு தடிமல்,
காய்ச்சல், இருமல் என்று அவனுடைய நோய்க்குப்
பல பெயர்கள் வைத்துச் சொன்னார்கள். நோயின்
பெயர் மாறினாலும் உடல் மட்டும் சுகப்பட்டு
வரவேயில்லை. மாதங்கள் மூன்று மூச்சு விடாமல்
கரைந்துவிட்டது. அவனது உடலைப்போல.
பொன்னம்மாள் தனக்குத் தெரிந்த நாட்டு
வைத்தியம் முழுவதையும் அவன்மீது பிரயோகித்துப்
பார்த்து.... தோல்வி கண்டு, கடைசியில் வாழைச்சேனை
ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போனாள். மேனாட்டு
வைத்தியத்தைக் கரைத்துக் குடித்தவரென்று
நம்பப்படும் அந்த டாக்டர் அவனை நன்கு
பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மேசையில் கிடந்த
வெள்ளைத் தாளில் கோழிக்கீறல் மாதிரி எதையோ
கிறிக்கிக் கொடுக்க, முத்தையா ஓடலியும் தண்ணீரில்
பலவித நிறங்களையும் ஊற்றிக் கலக்கி அடித்துக்
கொடுத்தார்.
எட்டுத் தடவைகளுக்கு தந்த மருந்து
முடிந்ததும் மீண்டும் அவனை அந்த டாக்டரிம்
அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான்
பொன்னம்மாள் நினைத்திருந்தாள். அதற்கிடையில்
பக்கத்துவீட்டு வள்ளியக்காவின் இலவச ஆலோசனை
கொத்துவேலி போட்டு அவளைத் தடுத்தது.
ஷஷபொடிச்சி! ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரின்னு
பொடியனுக்கு பச்சத்தண்ணியெ வாங்கி ஊத்தினா
வருத்தம் சுகப்படாது. மாலைக்குள்ளெ புள்ளெ
எங்கெயும் பயந்திருப்பான். எதுக்கும் நம்மெட
காளியப்புவப் புடிச்சி, ஒரு குறிபார்த்து நூலக்
கட்டினா மூணு நாளிலே எல்லாம் பறந்திடும்
பொடிச்சி!||
வள்ளியக்கை லெக்கணமாக் கதைப்பா.
வள்ளியக்கையின் ஆலோசனையில் போதிய
நம்பிக்கை வைத்துத்தான், பொன்னம்மாள்
குறியெல்லாம் பார்த்து அச்சரமும் கட்டி கோழியும்
நேர்ந்தாள். மூன்று நாட்களுள் ஷஷகாரணம் காட்டும்||
என்ற உத்தரவாதத்திலே உண்மை இல்லாமல் நோய்
நீடித்தது.
காளியப்பர் லேசுப்பட்ட பேர்வழியல்லர்,
அவர் ஏழு நாட்கள் கெடுப்போட்டு தனக்குத் தெரிந்த
வைத்திய முறைகளையெல்லாம் செய்து பார்த்து
விட்டார். அவருடைய கெடு ஏழு நாளிலிருந்து -
இன்னுமொரு ஏழு நாளுக்கு இழுபட்டு மூன்று
மாதங்களாகியும் இன்னும் கெடு முறியவுமில்லை,
சுகம் கிடைக்கவுமில்லை.
ஒவ்வொரு நாளும் மாலைக்குள் வந்து....
ஷஷஏய் பொன்னம்மா செம்பிலே தண்ணியெ
எடு பொடிச்சி|| சொல்லிக் கொண்டே காளியப்பர்
கிருஷ;ணனின் தலைமாட்டுப் பக்கமாக அமர்ந்து
கொள்வார்.
உடனே பொன்னம்மாள் கைபடாது அள்ளிய
தண்ணீர்ச் செம்பையும் வேப்பங்குழையையும் அவர்
முன்னால் கொண்டு வந்து வைப்பாள்.
காளியப்பர் வெற்றிலையைப் பெட்டியில்
கிடக்கும் பாக்கு வெட்டியை எடுத்து, செம்பிற்குள்
குத்தினெ இறக்கி அலை எழுப்புவார்.
ஓம்! சரவண சண்முகா சத்துரு சங்கரா
அருகிரு முருகா ஆங்கார முருகா - எரிஎரி
திருதிரு
இவர்மேல் வரப்பட்ட பூதபிசாசு வஞ்சனைகளையெல்
லாம் உச்சாடு உச்சாடு நடுநசி விலகு விலகு
ஓடு ஓடு
இவரை விட்டு அகன்று போகவே சிவாக....
ஒவ்வொரு முறையும் அவர் ஓதி ஊதும்
போது உண்டாகும் காற்றோடு - வெற்றிலைப்
பாணியும் வீணியும் கலந்து, தூறல் மழைபோல
அந்தச் செம்பு நீரில் படிவது அவருடைய மந்திரம்
ஓதும் கிரியையின் ஒரு
கிருபையாகும்.
ஓதி முடிந்ததும்
வேப்பங்குழையைத்
தண்ணீரில் துவட்டி அவன்
முகத்தில் ஷசரே|லென
அடிப்பார். ஈ விழுந்தாலும்
ஈட்டி குத்தியதுபோன்று
வலி எடுக்கும்
கிருஷ;ணனின் நொந்த
உடம்பில் காளியப்பர் தன்
ஷஷகை இருப்பு||க் காட்டி
வேப்பங்குளையால்
அடித்துக்
கொண்டுடிருக்கும்போதே
இருமலும் தொடங்கிவிடும்.
மரண அவஸ்த்தையோடு
இருமிக் கொண்டே
படிக்கத்தில் காறி
உமிழும்போது சளியில் இரத்தத் துணுக்குகள்
புரையோடிப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்
லை.
மந்திரம் ஓதும் சடங்குகள் தினமும் கிரமப்
பிரகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாள்களில்,
ஒருநாள் கிருஷ;ணனை அவனுடைய வகுப்பாசிரியரும்
பார்க்க வந்தார். அவருக்கு உண்மை இலேசாக
விளங்கியது.
உடனே பொன்னம்மாவை ஒரு பக்கமாக
அழைத்து,
ஷஷஅம்மா! கிருஷ;ணனை இப்படியே
வைத்திருப்பது நல்லதல்ல. பெரியாஸ்பத்திரிக்கு
கொண்டு போனால் அவர்கள் படம்பிடித்துப் பார்த்து
நல்ல மருந்தும் செய்வார்கள். பயப்படாமல் கொண்டு
போங்கள்|| என்றார்.
பொன்னம்மாவின் மனத்திலே
குடிகொண்டிருந்த ஷஷகரையாக்கன் பேய்|| பற்றிய பீதி
ஆசிரியரின் அக்கறையான அறிவுரையை
விரட்டியடித்தது.
என்றுமில்லாதவாறு அன்று கிருஷ;ணன் ஒரு
கவளம் சோறும் சாப்பிட்டு, பழைய சிரிப்பின்
சாயரையும் ஒரு முறை கோடிகாட்டினான்.
பொன்னம்மாளின் முகத்தில் செவ்வரத்தையின்
ஊடுருவல். அவள் மனத்திற்குள் காளியப்பரைச்
சங்கை கூர்ந்தாள்.
ஷஷஓமோம் இண்டெய்க்கி செய்கிறெ கழுப்பிலெ
எல்லாம் சரியாப்போகும்.||
தனக்குத்தானே உள்ளகமாகக் கூறிக்
கொண்டாள். பொழுதும் புளியடித்துறைப் பக்கமாக
கெளிந்து விட்டது. அவள் கழிப்புக்குத் தேவையான
பொருட்களையெல்லாம் ஒழுங்குபடுத்துவதில்
மும்முரமாக ஈடுபட்டாள்.
வெள்ளைத் தோட்டுப்பாயை எடுத்து -
வள்ளியக்காவும் தானுமாக ஓடி ஆடிச் சேர்த்த
வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூசணிக்காய்,
கரையாக்கன் பூக்கள்.....
அவற்றையெல்லாம் பார்க்கும்போது ஊமை
மகிழ்ச்சி அவள் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தது.
ஷஷஎன்டெ பிள்ளெ இன்னெம் நாலு நாளையிலெ
எழும்பிப் பள்ளிக்குப் போயிடுவான்||. மனம்
ஆறியதில், கவலை சற்றே விலகியது.
ஷஷபொன்னம்மா பாமிலெ பத்துமணி விசிலும்
ஊதிட்டிது. எல்லாத்தையும் ஆயத்தப்படுத்தி எடு. நான்
சின்னப்பொடிச்சியையும் காளியப்பரையும் கூட்டிட்டு
வாறென்||
வள்ளியக்கா குரல் கொடுத்தாள்.
அவள் அவசரப்படுத்திக்
கொண்டிருக்கும்போதே காளியப்பரின் குரலும்
கடப்பைத் தாண்டியது.
ஷஷஎன்னெ பொடிச்சி எல்லாஞ்செரியா? பொடியனெக்
கூட்டிட்டு வெளிக்கிடென்||.
வழக்கமாகப் போடுவதை விட, அன்று அவர்
கொஞ்சம் கூடத்தான் ஷஷபாவி||த்திருந்தார். அதன்மூலம்
ஷஷகரையாக்கனை|| மடக்கும் பக்குவம் தனக்கு
வந்துவிட்டதான தைரியம். அவரின் கட்டளையைத்
தொடர்ந்து காரியங்கள் விரைவாகின.
செழிப்பினைத் தாங்கிய அந்தப்
பென்னம்பெரிய ஆலமரம். அடர்ந்து, பரந்து செறிந்த
அதன் கிளைகளில் வெளவால்களின் -
ஷஷக்யூகீக்!|| செண்பகங்களின்
ஷஷமர்ஹ்ம்ஹ்... ஹ்ம்!||
இரவின் அயர்வுக்குச் சுருதி
சேர்த்துக் கொண்டிருந்த மாரிக்கால
தவளைகளின் அலறலும் இவற்றுடன்
சேர்ந்த போது அந்தச் சூழலுக்கு ஒரு
பயங்கரம் பொருத்திற்று.
காளியப்பர் காரியத்தில் இறங்கினார்.
பக்குவமாகப் பரப்பியிருந்த
சாமான்களுக்கு மத்தியிலிருந்த கற்பூரத்
தட்டை எடுத்தார். அவரின்
கரங்களிரண்டும் தன்னியல்பாகவே
கிருஷ;ணனின் தலையைச்
சுற்றவாரம்பித்தன. தனக்க வாலாயமான
மந்திரம் என்ற சொற்களின்
கோர்வையை அதரங்கள்
உருட்டத்தொடங்கியதில், வார்த்தைகளின்
உச்சாடனம் ஓங்க அவரின்
உடம்பும் குரலும் நடுங்கத்தொடங்கின. அவர் பாவித்த
சாமானின் கைங்கரியமும் அவருக்குத் துணைவந்தன
போலும்.
அவருடைய ஆட்டத்திலும், வார்த்தைகளின்
உருட்டலிலும் அனைவரும் கட்டுண்டுகிடந்தார்கள்.
கிருஷ;ணன் நோயாளி என்கின்ற முக்கியத்துவம்
அனைவரின் மனதினின்றும் நீங்கியிருந்தது.
காளியப்பரே மையமானார்.
சடுதியாக கிருஷ;ணன் அடக்கமுடியாத
அவஸ்த்தையுடன் இருமத் தொடங்கினான்.
பொன்னம்மாள் பதறிப் போய் மகனை நெஞ்சோடு
அணைத்துக் கொண்டாள்.
அவனுடைய வாய்வழியாக இரத்தக் கட்டிகள்
கொப்பளித்து வடியலாயின. அந்தக் கொடூரம்
பொன்னம்மாளின் வயிற்றில் தீ மூட்டியது.
அவனுடைய நிலையைக் கண்ட
காளியப்பருக்கு ஷஉஷhர்| வெறி தலைக்கேற, மந்திர
உச்சாடனத்தை உச்சச் சருதிக்குக் கொண்டு சென்றார்.
இருமிக் களைத்த கிருஷ;ணனின் கண்கள்
தாயின் முகத்தைப் பரிவுடன் நோக்கிய நிலையில்
ஷவெறித்து| நின்றன.
வாழ்க்கையின் முழு நிதியத்தையும் இழந்த
ஆவேசத்துடன், அந்த இடுகாட்டுப் பிரதேசம் நடுங்க
பொன்னம்மாள் ஒப்பாரி வைத்தாள்.
ஷஷஐயோ! ஆரோ தீட்டுக்காரியும் இஞ்செய
வந்திட்டாடி.... ய்.... அதான் கோவப் பார்வையிலே
கரையாக்கென் அடிச்சிப்போட்டிய்ய...!||
வள்ளியக்காவும் அவளுடன் கோரஸ்
ஆனாள். - 1968 -
தீட்டு
எஸ்.எஸ்.எம். ஹனிபா

மானம் எனுமொரு பாளையில்
தீனி சமைத்தவனே! - தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!
காட்டு தமிழ் மறம் ஓட்டு வரும் பகை!
பூட்டு நொறுக்கடுவாய்! - நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க்கொடியே!
முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? - இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!
நாறு பிணக்களம் நூறு படித்ததம்
வீறு மிகுந்த குலம் - பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!
நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! - மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு!
காலம் அழைக்குதடா!

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்

மாவீரர் வரலாறு மாவீரர் வரலாறு

Page 1 of 7
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…