வெளிமாநிலத்தவரே தமிழ்நாட்டை விட்டு வெளியேறுங்கள்! போராட்டத்துக்கு -கனடாவில் இருந்து ஆதரவுக்குரல்

தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலத்தவரை வெளியேற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்க முயற்சிக்கு கனடா நாட்டில் இருந்து தமிழ்த்தாய் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

“தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களின் ஆதிகம் அதிகமாகி வருகிறது. தமிழர்களின் வேலைவாய்ப்புகளும் நிலபுலங்களும் வெளிமாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்புக்களுக்கு ஆளாயிருக்கிறது.

வரலாற்றுக் காலம் தொட்டு தமிழர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண் இன்று வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தால் ‘தமிழின அடையாளம்’ இழக்கும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. தமிழர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படும் அபாயமான நிலையிலும் உள்ளது. இந்த ஆபத்தை கருத்தில் கொண்டு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ‘தமிழர் வாழ்வுரிமையை பறிக்காதீர்;கள் வெளிமாநிலத்தவரே திரும்பிப் போங்கள்’ என்ற முழக்கத்தோடு மனித சங்கிலிப் போராட்டத்தை 20.12.2019 அன்று காலை 10 மணிக்கு சென்னை நடுவெண் (சென்றல்) தொடர்வண்டி நிலையம் எதிரில் நடத்துகிறது. தமிழ்த் தாய் மன்றம் இப்போராட்டத்துக்கு தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை அன்றைய நாளில் புலம்பெயர் உறவுகள் சமூகவலைத் தளங்களில் ‘தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலத்தவரே வெளியேறுங்கள்’ என பரப்புரை செய்யவும் அழைப்பு விடுக்கின்றோம்.” இவ்வாறு அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தோவியம்: பிரபு மதி

'தமிழ்நாட்டில் இருந்து  வெளிமாநிலத்தவரே வெளியேறுங்கள்'

773 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *