வாகனத்தில் புலம்பெயர் புலி! -பிக்கு மீண்டும் கிலி!

(மட்டக்களப்பு , தமிழீழம்)
தென் தமிழீழம் மட்டக்களப்பு நகரில் உள்ள ‘சிறீ மக்களராம ராஜமகா வித்தியாராஜா’ என்ற பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மீண்டும் அடாவடித் தனத்தில் இறங்கியுள்ளார். அந்த விகாரைக்கு அருகில் சென்றுகொண்டிருந்த திருப்பிறப்பு (கிறிஸ்மஸ் -நத்தார் ) கொண்டாட்ட வாகனத்தை மறித்து அதில் இருப்பவர்கள் புலம்பெயர்ந்த புலிகள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பிரதேசம் சிங்களப் பிரதேசம் எனவும் அங்கு மற்ற மதத்தினருக்கு எந்த வேலையும் கிடையாது என சிங்கள காவல்துறையின் உதவியுடன் அவருடைய அடாவடித் தனம் தொடர்கிறது.
முழுமையான காணொளி தமிழ் ஆக்கத்துடன் கீழே: தமிழில் திரு.றோய் சமாதானம்

213 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *