தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்;த்துகள் உரித்தாகுக. இன்று சனவரி 15 ஆம் நாள். கதிரவன் (சூரியன்) வடதிசையை நோக்கி (தமிழர்நாட்டில்) பயணம் செய்ய ஆரம்பிக்கும் முதல் நாள். இதுவே தை முதலாம் நாள். இந்நாளையே பழந்தமிழர்கள் தமது புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்.

சுதிரவனின் வடதிசை நோக்கிய பயணத்தை நமது முன்னோர் ‘வடசெலவு’ என்பார்கள். இதனை ஆரியர் ‘உத்திராயனம்’ என்பார்கள் சமசுக்கிருத மொழியில் (நம்மைப் பார்த்து கொப்பி அடித்து)

இன்று ‘திருவள்ளுவர் ஆண்டு ‘ 2051 முதல் நாள், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல், என தமிழினத்துக்கு முக்கியமான நாள் ஆகும்.

தமிழர் ஆண்டு

365 நாள் 15 நாழிகை 31 வினாடி 15 தற்பரைகள் கொண்டது ஓர் ஆண்டு என பண்டைத் தமிழர்கள் தமது ஆண்டு முறையை துல்லியமாக வகுத்துள்ளனர்.

பழந்தமிழர் கண்ட நுண்ணிய கால அளவுகள்

60 தற்பரை – 1 வினாடி
60 வினாடி – 1 நாழிகை
60 நாழிகை – 1 நாள்
3.75 நாழிகை – 1 முழுத்தம்
2 முழுத்தம் – 1 யாமம்
8 யாமம் – 1 நாள்
7 நாள் – 1 கிழமை
15 நாள் – ஒரு பக்கம்
2 பக்கம் – ஒரு மாதம்
2 மாதம் – 1 பருவம்
3 பருவம் – 1 செலவு
2 செலவு – 1 ஆண்டு
(365 நாள் 15 நாழிகை 31 வினாடி 15 தற்பரைகள் கொண்டது ஓர் ஆண்டு)

தமிழ் அளவுக்கு ஏற்ற ஐரோப்பிய அளவுகள் (ஆங்கில)

2.5 தற்பரை – 1 நொடி (second)
2.5 வினாடி – 1 நிமையம்
60 வினாடி – 24 நிமையம் (1 நாழிகை)
2.5 நாழிகை – 1 மணி (hour)
1 முழுத்தம் – 1.5 மணி

382 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *