செய்வோம் செய்ய முன் செத்து மடியோம்! -தமிழர் சூழுரை

(சென்னை தமிழ்நாடு, நமது செய்தியார்)
வெளிமாநிலத்தவர்களை வெளியேற்றும் தமிழ்த்தேசப் பேரியக்கத்தின் போராட்டம் பெரு வெற்றி பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று சென்னை நடுவெண் (சென்ரல்) ரெயில் நிலையத்துக்கு எதிரே நடைபெற்ற போராட்டம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெருவெற்றி அடைந்துள்ளதாக தமிழ்த்தேசிய நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெற்றியானது பல பரிணாமங்களைக் கொண்டது என அவர்கள் பட்டியல் இடுகின்றனர்.

அ) போராட்டம் முதன்மையான ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்துள்ளது.

ஆ) மக்களிடம் இருக்கும் தமிழ்த்தேசிய வேட்கையை வெளிப்படுத்தி நிற்கிறது.

இ) தமிழகத்தில் இருந்து வெளியேற்றப் பட வேண்டியவர்கள் யார் என்பதை முழக்க அடைகளாகவும், ஓசை முழக்கங்களாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வெளிப்படுத்தினர். இது வரலாற்றுப் பதிவு.

ஈ) தமிழ்த்தேசிய அசைவியக்கத்துக்கு புதிய தொரு களம் திறக்கப்பட்டுள்ளது.

உ) புதிய களம்: அறிவுசாதூரியமான அருமையான காய் நகர்தல் ஒன்றை ‘மக்கள் ஆட்சி தத்துவத்துவ’ வரையறை நின்றே செய்து காட்டியிருக்கின்றார் ஐயா பெ.மணியரசன்.

என விவரிக்கின்றனர் தமிழ்த்தேசிய அரசியல் நோக்கர்கள். ‘முதல் வெற்றி முழுமையான வெற்றியாக அமையும் என்பதல் ஐயம் இல்லை.’ எனவும் ‘செய்வோம் செய்ய முன் செத்து மடியோம்!’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும் வெற்றிக்களிப்பல் உள்ளதாக எமது தமிழக செய்தியாளர் இளமாறன் தெரிவிக்கின்றார்.

502 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *