காணவில்லை

(ரொரன்ரோ, கனடா)

ஸ்காபுரோப் பகுதியில் 53 வயதான தமிழ்ப் பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளார். இவரை கண்டுபிடிக்க ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். 

காணாமல் போனவர் 53 வயதான சிறீசத்தி குமாராசாமி எனவும் அவர் கடைசியாக ரெப்ஸ்கோட் வீதிக்கும் பிஞ்வீதி கிழக்கு சந்திப்புக்கும் (Finch Avenue East and Tapscott Road )அருகாமையில் கடந்த ஞயிற்றுக் கிழமை (15.12.2019) பிற்பகல் 12:30 மணியளவில் காணப்பட்டதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போய் உள்ள சிறீசத்தி அவர்கள் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் எனவும்  நடுத்தர உடல் தோற்றம் உடையவர் எனவும், நரை முடி கொண்டவர் என அவரது தோற்றத்தை காவல்துறையினர் விவரிக்கின்றனர். அவர் கடைசியாக காணப்பட்ட போது கருப்பு நிற குளிர்கால காலணியும்,  கருப்பு நிற குளிருக்கு அணியும் மேற்சட்டையும் ஒரு பழுப்பு நிற பையையும் வைத்திருந்தார் என காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இவரது பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் கவலை கொண்டுள்னர்.

இவர் பற்றிய விவரம் தெரிந்தவர்கள் பின்வரும் காவல்துறை இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: 416-808-4200, 416-222-TIPS (8477)

473 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *