அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!

(மட்டக்களப்பு, தமிழீழம்)
தென் தமிழீழம் மட்டக்களப்பு நகரில் உள்ள ‘சிறீ மக்களராம ராஜமகா வித்தியாராஜா’ என்ற பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. . மேற்படி சம்பவம் பற்றி அறியப்படுவதாவது பெந்திகோஸ் மத அமைப்பின் அருட் தந்தை இறந்தவர்கள் கடைசியல் எங்கே போகிறார்கள் என கேட்க ‘நீ எனக்கு மதம் படிப்பிக்க முயல்கிறாயா?’ என அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தைக்கு கன்னத்தில் அறைந்துள்ளார். மேற்படிக் காணொளியும் தமிழில் விளக்கமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அருட் தந்தை ஒருவரை நிறுத்திய மேற்படி பிக்கு காவல்துறையினர் முன்னிலையில் தகாத வார்தைகளால் திட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மேற்படி பிக்குவின் அடவாடித் தனங்கள் மட்டக்களப்பில் அதிகரித்து வருகிறது.
விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் தென்தமிழீழம் இருந்தபோது அவர்களோடு நல்ல உறவில் அவர்களுக்கு கீழ்ப்படிவாக இந்த அம்பிட்டிய சுமணரத்தின தேரர் என்ற பிக்கு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் திரு.றோய்

மேற்படிக் காணொளியும் தமிழில் விளக்கமும் கீழே :

3,901 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *